×

மத்திய அமைச்சர் ஷோபாவிற்கு எதிராக திமுக புகார் 

 

பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு எதிராக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

மத்திய இணை அமைச்சர் சோபா பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்களை காரணம் என்று கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களை தொடர்புபடுத்தி தான் தெரிவித்த கருத்துகளுக்காக கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தியும் பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா மற்றும் பாஜக மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.