அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது - செந்தில் பாலாஜி
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவருடைய காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது தவறு என்று தெரிந்தே பலரிடம் லஞ்சம் பெற்றுள்ளீர்கள் இதை ஒப்புக்கொள்கிறீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில்பாலாஜி, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை கைப்பற்றிய அவணங்கள் என்னுடையது அல்ல. இது என் மீது புனையப்பட்ட வழக்கு, சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன் என்றார். இதனைக்கேட்ட நீதிபதி, ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.