×

ஒருவரின் சாதியை தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது?- கனிமொழி எம்பி

 

சாதி பெருமையை ஏற்றுக் கொள்ளும் பிரதமர் உருவாக்கும் பாடத்திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என மக்களவையில் திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கனிமொழி எம்.பி., “மத்தியில் உள்ள பாஜக அரசு மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு எப்படி தலையிட முடியும்? நீங்கள் மட்டும் தான் மக்கள் பிரதிநிதிகளா? எங்கள் முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லையா? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கூட வாங்க முடியவில்லை. ரயில் நிலையங்களில் கூட இந்தி திணிப்பு உள்ளது. 

இருமொழி கொள்கை என்ற எங்கள் மாநில உரிமைகளில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? குலக்கல்வியை ஊக்குவிக்கும் புதியக் கல்விக் கொள்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கிராமப்புற மாணவர்கள் படிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்க முயற்சி செய்கிறது.  சாதி பெருமையை ஏற்றுக் கொள்ளும் பிரதமர் உருவாக்கும் பாடத்திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது. சாதி என்ற கட்டமைப்பை ஒழிக்க காலம் காலமாக நாங்கள் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறோம். சாதி என்பது பெருமை என்று சொல்லக்கூடிய ஆட்சியாக மோடி அரசு உள்ளது. ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்துகொள்வதில் என்ன பெருமை இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.