×

அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அனுப்புவோம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 

திமுகவை மட்டுமல்ல, நம்முடைய கட்சியின் எந்தவொரு உறுப்பினரையும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  “2021 சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டி அடித்ததைப் போல, 2024 நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம். அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி என பல அணிகள் உள்ளன. அதேபோல் அதிமுகவில் பாஜக அணி என்ற ஒரு அணியும் இருக்கிறது. திமுகவை மட்டுமல்ல, நம்முடைய கட்சியின் எந்தவொரு உறுப்பினரையும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

சமூக நீதி நாளான இன்று தமிழ்நாட்டை பண்படுத்திய பெரியாரின் கொள்கைகளை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்திற்கும் கொண்டு சேர்க்க அயராது உழைப்போம். இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் பாசிஸ்ட்டுகளை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் வீட்டுக்கு அனுப்ப கழகம் பிறந்த இந்நாளில் உறுதியேற்போம். நான் வேலூர் வந்தபோது, பெண்கள் என்னை சூழ்ந்துகொண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக நன்றி தெரிவித்தனர். இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய மாநாடாக இளைஞரணி மாநாடு இருக்கும். இளைஞரணி மாநாட்டை இந்தியாவிலேயே சிறப்பாக நடத்துவோம்.” என்றார்.