×

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்!

 

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமாகப் பணப்பரிவர்த்தனை மூலம் முதலீடுகள் செய்ததாக தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ரிசர்வ் வங்கி ஒப்புதலை பெறாமல் வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கியது தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,  திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ.89.18 கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் ஜெகத்ரட்சகன்  மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள், சவிதா கல்லூரியில் அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.