×

திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

 

முதலமைச்சர் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 இல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் 'ஒரே நாடு ஒரு தேர்தல்', இந்தியா என்ற பெயர் மாற்றம் தீர்மானம் உள்ளிட்டவை கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த சூழலில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற  திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில்,  சிறப்புக் கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசிக்கவுள்ளது.