×

வருகிற 29ம் தேதி தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர் கூட்டம்

 

தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர்,  துணை அமைப்பாளர்கள் கூட்டம் வருகிற 29ம் தேதி நடைபெறும் என மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 29-01-2024 திங்கட்கிழமை, காலை 10.00 மணியளவில், கோவை, பீளமேடு, காளப்பட்டி சாலை “சுகுணா கலையரங்கில்”, எனது தலைமையில் நடைபெறும். கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., சிறப்புரையாற்றவுள்ளார்.