விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - திமுக அமோக வெற்றி
Jul 13, 2024, 14:27 IST
நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. 20 சுற்று முடிவுகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,18,567 பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 53,442 வாக்குகளும், நாதகவை சேர்ந்த கா.அபிநயா 10,009 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.