×

பிரம்மாண்டமாக தொடங்கிய திமுக பவள விழா..  செந்தில் பாலாஜி பங்கேற்பு.. 

 


 திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் தொடங்கியது.  

காஞ்சிபுரத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட நிலையில்,  அனைத்து கட்சித் தலைவர்களும் மேடையில் பங்கேற்றவாறு பொதுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.  அதன்படி காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறும் கழக பவள விழா பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக தொடங்கியிருக்கிறது.  கழகத் தலைவர்  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். கழகப் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெ றும் இப்பொதுக்கூட்டத்தில் கழகக் கூட்டணிக் கட்- சிகளின் தலைவர்கள் பங்கேற்றுவாழ்த்துரை வழங்குகின்றனர் என தலைமைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தி.மு.கழக பவள விழாவையொட்டி  விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்.கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன். சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  இந்திய முஸ்லீம் லீ தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மநீம தலைவர் கமல்ஹாசன். மமக தலைவர் ஜவாஹிருல்லா, தவக தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். 

 சுமார்  50,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டு, பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியை அனைவரும் காணும் வகையில் ஆங்காங்கே எல்.இ./டி திரைகள் போட்டப்பட்டுள்ளன.  காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றுள்ளார். மேலும் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், தாமோ அன்பரசன், சேகர் பாபு உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்..