×

மருத்துவர்களால் ஏற்பட்ட பெருங்குழப்பம்..!! இறுதிச்சடங்கின்போது அசைந்த குழந்தை..!

 

பிரேசில் நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை நம்பி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்து, சவப்பெட்டியில் வைத்திருந்தபோது, குழந்தையின் விரல்களில் அசைவு ஏற்பட்டுள்ளது.


உடனே பதறிப்போய் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியபோது குழந்தை உயிரிழந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனை மீது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.


பின்னர் புகாரை பெற்றுக்கொண்ட அந்நாட்டு போலீசார் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.