விக்ரமன் வீட்டில் குவிந்த மருத்துவர்கள் - முதல்வருக்கு நன்றி
Oct 30, 2023, 13:58 IST
திரைப்பட இயக்குனர் விக்ரமன் மனைவி ஜெயப்பிரியா கடந்த ஐந்து ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உள்ளார். குச்சிப்புடி கலைஞரான ஜெயப்பிரியா தமிழ்நாட்டில் 4,000 மேடைகளில் நடனமாடியுள்ளார். மருத்துவ குளறுபடியால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக பிரச்சனை ஏற்படுத்த தற்போது சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் தனது மனைவிக்கு உரிய சிகிச்சை அளித்து உதவி செய்யுமாறு முதல்வர் ஸ்டாலினிடம் விக்ரமன் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்துள்ளார்.அமைச்சருடன் கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குனர், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் மற்றும் மருத்துவ குழுவினர் உடன் இருந்தனர்.