×

"மஞ்சள் கலர் பழம் சாப்பிடாதீங்க.." - உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!!
 

 


சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இன்று காலை 6 மணி முதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி  வருகின்றனர்.  கெமிக்கல் மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.

செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக வந்த புகாரின் பெயரில் ஆய்வு நடத்தப்பட்டது அதிகாரிகள் நடத்திய சோதனையில் நான்கு டன் மாம்பழங்கள்,  நான்கு டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அதிகாரி, கோயம்பேட்டில் காலை .நான்கு மணி முதலே ஆய்வு நடத்தி வந்துள்ளோம் . தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் மாம்பழத்தை கற்கள் கொண்டு பழுக்க வைக்கும் முறை சிலரால் நடத்தப்பட்டு வருகிறது சிலர் செய்யும் தவறால் மாம்பழ தொழிலே  பாதிக்கப்படுகிறது.  

நாங்கள் இது குறித்து நிறைய அறிவுரைகளை கொடுத்திருக்கிறோம். ஒரு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டதிலேயே நான்கு டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மாம்பழங்கள் அனைத்தும் கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்டுள்ளது.  இந்த பழங்களை நாம் சாப்பிடவே கூடாது. சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் கேடு. வாழைப்பழங்களும் நான்கு டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

இது போன்ற பழங்களை தயவு செய்து வழங்க வேண்டாம் . கடைகளில் இது போன்ற பழங்கள்தான் மலிவு விலைக்கு வாங்கி சென்று பயன்படுத்தப்படுகிறது . இதனால் ஜூஸ் குடிக்க செல்லும் போது நீங்களே கடைக்கு சென்று பழங்களை தேர்வு செய்து ஜூஸ் போட்டு தர சொல்லுங்கள்.  இது மாம்பழங்களில் கருப்பு போன்று படிந்து இருக்கும் பழங்களை தயவுசெய்து வாங்காதீர்கள்.இயற்கையாக பழுக்க வைக்கும் பழங்களில் வாசனை நன்றாக இருக்கும்.  ஆனால் கற்கள் கொண்டு பழுக்க வைக்கும் பழங்களில் மஞ்சள் நிறங்களில் மாறுமே தவிர வாசம் இருக்காது என்றார் .