×

புதுச்சேரியில் உயிரிழந்த 9-வயது சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்

 

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலுக்கு  கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "புதுச்சேரியில் உயிரிழந்த 9-வயது சிறுமியின் உடலுக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன்.சிறுமியின் மரணத்தில் ஒரு தாயாக நான் நிலைகுலைந்து நிற்கிறேன்.சிறுமிக்கு நடந்த கொடுமை மன்னிக்கவே முடியாத குற்றம்.உணர்வு பூர்வமாக சிறுமியின் குடும்பத்தினருடன் துணை நிற்கிறேன்.நியாயமான கோரிக்கைக்காக போராடும் புதுச்சேரி பொதுமக்களின் மனநிலையில் தான் நானும் இருக்கிறேன்.குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.