அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!
Jun 8, 2024, 10:25 IST
ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,725க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,800க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து ₹54,400க்கும், கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ஒரு கிராம் ₹6,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, இதன் மூலம் ஒரு கிராம் ரூ.6840-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.