×

குடிபோதையில் ரகளை செய்த அரசு பேருந்து ஓட்டுநர்..!

 

அரசு பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் பேருந்தை ஓட்டியதாகவும் சில நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாகவும் பொதுமக்கள் ஓட்டுனரை பிடித்து சரமாரி கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தன் மேல் இருந்த தவறை ஒப்புக்கொள்ளாமல் “பொதுமக்களிடம் நீ யார்ரா என்னை கேள்வி கேட்க ? நீ எங்க வேணும்னாலும் சொல்லிக்கோ போ” என திமிராகவும் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த பெண்களை முகம் சுளிக்க வைத்தது. இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை விட்டு நீங்காத நிலையில் குடிபோதையில் அரசு பேருந்தை ஓட்டி மீண்டும் ஒரு விபத்து ஏற்படுத்த முயன்ற ஓட்டுனரின் சம்பவம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

<a href=https://youtube.com/embed/tEWhSXcMMu4?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/tEWhSXcMMu4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">