×

சென்னை செல்ல ரயில் ஏற முயன்றபோது துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

 

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

வேலூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுகவின் பொதுச் செயலாளரும்  நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு அதன் பின் இன்று மாலை சென்னை செல்ல இருந்த நிலையில், காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்றபோது திடீரென தலைவலி  மற்றும் தலைச்சுற்றல் இருப்பதாக சொல்லி உள்ளார். அதன் பின்பு அமைச்சர் துரைமுருகன் வேலூரில் உள்ள நறுவி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் அனைத்து பரிசோதனைகளும் முடிவுற்ற நிலையில் வீடு திரும்பி சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
 
நாளை சென்னையில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள சென்னைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.