×

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தேவையில்லை- துரை வைகோ

 

தமிழ்நாடு மக்களுக்கான நிதிக்கு கையேந்தி தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். இதில் வேறு எந்த அரசியல் காரணங்களும் இல்லை என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ, “திருமாவளவனின் மது விலக்கு மாநாட்டிற்கு 100 சதவீதம் எங்களின் ஆதரவை அளிக்கிறோம். பூரண மதுவிலக்கு தான் எங்களின் எண்ணமும், அரசியல் இயக்கங்கள் நினைத்தால் மட்டும் பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியாது பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் பூரண மதுவிலக்கை கொண்டு வர  முடியும். தமிழ்நாட்டில்  கடுமையான  நிதி நெருக்கடி உள்ளது, இதற்குக் காரணம் ஒன்றிய அரசுதான், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையும் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு பள்ளி கல்வி துறைக்கான நிதியையும் தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

தமிழ்நாடு மக்களுக்காக நிதி வேண்டி, கையேந்தி தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார் , இதில் வேறு எந்த அரசியல் காரணங்களும் இல்லை, நாங்கள் என்ன சொன்னாலும் முதலமைச்சர் செய்து கொடுக்கிறார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை இந்த தருணத்தில் தேவையில்லை என்பது தான் மதிமுகவின்  நிலைப்பாடு. சமூக நீதி திராவிட பாரம்பரியங்களை சொல்லித்தான் விஜய் அரசியலுக்கு வருகிறார் , முழு நேர அரசியலுக்கு வரும்பொழுதுதான் மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பது தெரியும்” என்றார்.