×

நெல்லையில் நில அதிர்வு - மக்கள் பீதி

 

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென நிலஅதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில்  காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குறிப்பாக விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பாபநாசம், சிங்கம்பட்டி, மணிமுத்தாறு ஆகிய பகுதியில் இந்த அதில் உணரப்பட்டதாகவும் அதனால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

ஆனால் தற்போது வரை அரசின் Seismo இணையதளத்தில் பதிவுகள் ஏதும் வரபெறவில்லை.  இதுவரை யாருக்கும் காயமோ பிற சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. மாவட்ட நிர்வாக களஅலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.