ஜப்பானில் 4.8 நிலநடுக்கம்..!
Jul 23, 2024, 05:15 IST
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடகிழக்கில் உள்ள இபராக்கி மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இபராக்கி மாகாணத்திற்கு கீழே 90 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் இதன் தாக்கம் மத்திய டோக்கியோவில் அதிர்வை ஏற்படுத்தியது. அங்கிருந்த மக்கள் பீதியடைந்தனர்.