×

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு- அவசரமாக தரையிறக்கம்

 

சென்னையில் இருந்து திருப்பதிக்கு 169 பயணிகளுடன் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.  உடனே அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஐதரபாத்தில் இருந்து திருப்பதி சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் இயந்திரக்கோளாறு கண்டறியப்பட்டதால், விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக விமானமத்தை சென்னைக்கு திருப்பி சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. விமானியின் துரித நடவடிக்கை காரணமாக விமானத்திலிருந்த 169 பயணிகள் உட்பட, 177 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

பயணிகள் அனைவரையும், மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 -