ஆதவ் அர்ஜூனா வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக தொடரும் சோதனை!
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே கடந்தாண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. லாட்டரி அதிபர் மார்ட்டின் விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதாக வருமானவரித்துறை ஏற்கனவே சோதனை நடத்தியது. மார்ட்டினுக்கு தொடர்புடைய ரூ.451 கோடி மதிப்புடைய சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்த நிலையில், லாட்டரி அதிபர் மார்டின் மற்றும் அவரது மருமகனும், விசிக துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக மீண்டும் சோதனை நடந்து வருகிறது. சென்னை மற்றும் கோவையில் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 மணி நேரத்திற்கு மேலாக ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.