டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், “சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்ஷன் கடந்த சில நாட்களாக #டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். குழந்தையை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் அய்யனார்-சோனியா தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் ரக்சன் என்ற மகன் இருந்தான். ரக்சன் கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது பெற்றோர் ரக்சனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அந்த சிறுவனை பரிசோதித்து பார்த்ததில் அந்த சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிறுவன் கடந்த 06ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி ரக்சன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.