×

"கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய நாளில் மகிழ்ச்சி பெருக வேண்டும்" - ஈபிஎஸ் வாழ்த்து 

 

ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இனிய நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்று ஈபிஎஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் , காக்கும் கடவுளாம் கண்ணபிரான் கிருஷ்ணராக அவதரித்த திருநாளை “கிருஷ்ண ஜெயந்தி” என்று மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் இந்த நன்னாளில், எனது இனிய “கிருஷ்ண ஜெயந்தி" நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினமான கிருஷ்ண ஜெயந்தியன்று, மக்கள் தங்கள் இல்லங்களில் அழகிய வண்ணக் கோலங்களிட்டு, வாயிற்களில் மாவிலை தோரணங்களைக் கட்டி, ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தைகளின் பிஞ்சு பாதச் சுவடுகளை மாவில் நனைத்து இல்லங்களில் வழிநெடுக பதித்து, கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பழங்கள், இனிப்பு பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வழிபட்டு மகிழ்வார்கள்.