×

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, எதிரி கட்சித் தலைவர்- மா.சுப்பிரமணியன்

 

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, எதிரி கட்சித் தலைவர் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவித்ததுடன் தமிழக அரசு சார்பில் 60 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதில் மருத்துவ உபகரணங்கள் அமைக்கும்  பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.  இதனை இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி. மஸ்தான் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்பொழுது துறை சார்ந்த அதிகாரிகளிடம் கட்டுமான பணிகள் குறித்தும், முடிவடையும் தருவாய் குறித்தும் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “எந்த மருத்துவரும் ஓர் உயிர் போகும் வகையில் மருத்துவம் பார்ப்பதில்லை. சில இடங்களில் தவறுதலாக உயிர் பலி ஏற்படுகிறது. தவறான சிகிச்சை அளிப்பதால் உயிர் பலி ஏற்படுவதாக விசாரணையில் தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி  தலைவர் அல்ல, அவர் எதிரி கட்சித் தலைவர். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போது பல தடவை வெளி நாடுகளுக்கு சென்றுள்ளார். அப்பொழுதெல்லாம் அவர் கொள்ளையடித்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்வதற்காக சென்றுள்ளார் என்று கூறினால் சரியாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.