தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவ எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளது. தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. போதைப்பொருட்களை கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையானது. தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டதாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.