அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி!
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் தலைவர்கள் பலரும் குடியரசு தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஜனநாயகத்தின் தாயகம் என்று சிறப்பிக்கப்படும், உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் நம் இந்திய திருநாட்டின் அரசியலமைப்பு சாசனம் நிறைவேற்றப்பட்ட இந்நன்னாளில், அரசியல் அமைப்புச் சாசனத்தின் அடிப்படை வேர்களான இன வேறுபாடற்ற மதச்சார்பற்ற சமுகமும், ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் தழைக்கவும், அமைதி, வளம், வளர்ச்சி ஓங்கப்பெற்று நாடு செழிக்கவும், நாட்டின் உயரிய வளர்ச்சிக்கும் அயராது பாடுபடுவோம் என உறுதியேற்பதுடன், அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.