×

தமிழக ஆளுநருடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்களின் விவரம் குறித்த பட்டியலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியிடன் வழங்கினார். 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. இந்த நிலையில், போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சதித்து மனு அளித்தார். 

இது தொடர்பாக அதிமுக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும், தமிழகத்தில் கடந்த சில நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்களின் விவரம் குறித்த பட்டியலையும் தமிழக ஆளுநரிடம் மாண்புமிகு கழக பொதுச்  செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி  அவர்கள் மனுவாக வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.