×

உறுதியாக சொல்கிறோம் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

 

பாஜகவுடன் அதிமுக மறைமுக உறவு வைத்திருப்பதாக சிலர் கூறுவது உண்மையில்லை எனவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றி திமுக அரசாங்கம் நடத்துகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% உயர்ந்துள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாங்கமாக திமுக இருக்கிறது. திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்படுகிறார்கள். 

அதிமுக ஆட்சி அமைக்கும் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பாக உணருவார்கள். பாஜகவுடன் அதிமுக  மறைமுக உறவு வைத்திருப்பதாக சிலர் கூறுகிறார்கள். முன்பே அறிவித்துவிட்டோம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை.  உறுதியாக சொல்கிறோம் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என கூறினார்.