அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம் - எடப்பாடி பழனிசாமி
Dec 5, 2023, 11:00 IST
எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நம் அனைவருக்கும் தலைவியாய் வாழ்ந்து, என்றென்றைக்கும் வழிகாட்டியாய்த் திகழும் இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி “அம்மா” அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன். மாண்புமிகு இதய தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்துக்கு, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (05.12.23) மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.