×

நேதாஜியின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி 

 

ஆங்கிலேயர்களுக்கு எதிராக துளியளவும் அச்சமின்றி போராடிய பெரும் ஆளுமைமிக்க தேசத் தலைவர் நேதாஜி அவர்களின் பிறந்தநாளில் அவரின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேதாஜியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.