"உயிருள்ளவரை தேசத்திற்காகவே என் பணி" என வாழ்ந்தவர் வ.உ.சிதம்பரனார் - ஈபிஎஸ் புகழாரம்
Nov 18, 2024, 12:24 IST
செக்கிழுத்த செம்மல் ஐயா.வ.உ.சிதம்பரனார் புகழை போற்றி வணங்குகிறேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வ.உ.சிதம்பரனாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.