×

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு

 

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக பல்வேறு அணிகளாக பிளவுபட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி தினகரனின் அமமுக என பல அணிகளாக உள்ளன. இதனிடையே அதிமுக சின்னம், கொடி தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும் அதிமுக உட்கட்சி தொடர்பாக பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 

இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, சின்னத்தை யாருக்கும் ஒதுக்ககூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சூரியமூர்த்தி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். அவர் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.