மதிமுகவிற்கு பம்பர சின்னம் - இந்திய தேர்தல் ஆணையம் பதில்
Mar 27, 2024, 10:21 IST
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதி மன்றத்தில் பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கூறி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை மதிமுகவிற்கு ஒதுக்க முடியாது என அவர்களது வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.