×

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது!

 

நாடாளுமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டதை அடுத்த தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. 

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நடப்பு மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். 

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம். 100 வயதுக்கு மேல் நாட்டில் 1.02 லட்சம் வாக்களர்கள் உள்ளனர். ஏப்ரல் 01ம் தேதி 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க் தகுதி. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டதை அடுத்த தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்கள் படங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகிறது.