×

மைசூரூ மூடா அலுவலகத்தில் அமலாக்கத்துறை 2வது நாளாக சோதனை..!

 

 மைசூரூ மூடா அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் மூடா விவகாரம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, அவரது மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் நில உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இந்த சோதனை இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.  நேற்று மூடா அலுவலகத்தில் சோதனை நடத்தி இரவு வெகுநேரம் வரை ஆவணங்களை சோதனையிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு, இன்று காலை முதல் மீண்டும் ஆவணங்களை சோதனையிட்டு வருகின்றனர். 

மைசூர் நகர் தாலுகா அலுவலகத்திலும் பெங்களூரு கெங்கேரியில் உள்ள நில உரிமையாளர் தேவராஜ் வீட்டிலும் இந்த சோதனை நடத்து வருகிறது.இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூடாவில் உள்ள ஆவணங்களை சோதனை செய்து மூடா சட்டவிரோதம் தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வரின் மனைவிக்கு வழங்கிய சைட்டுகளின் விவரங்கள் தொடர்பாக முடா ஆணையர் ரகுநந்தன் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் மனைவியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலம் குறித்தான தகவல்கள் சைட் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் பின்பு அது ரத்து செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் என அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.