ஜிஎஸ்டி வரி எனும் பெரும் சுமையை வணிகர்களின் தலையில் ஏற்றும் மத்திய அரசு - ஈபிஎஸ் கண்டனம்
வாடகை கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி எனும் பெரும் சுமையை வணிகர்களின் தலையில் ஏற்றும் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடகைக் கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட சரிவில் இருந்து வணிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்ற இந்த வேளையில், வாடகை கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி எனும் பெரும் சுமையை அவர்கள் தலையில் ஏற்றும் மத்திய அரசுக்கு எனது கடும் கண்டனம்.
வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த வாடகைக் கட்டடங்களுக்கான 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசையும் , உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசையும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.