×

திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள் கைது - ஈபிஎஸ் கண்டனம்

 

திருப்பூரில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்களை கைது செய்தது கண்டிக்கதக்கது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மட்டுமன்றி, ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு. இவற்றை கட்டவில்லை எனில் அபராத வரி மற்றும் வாடகை கட்டிடங்களுக்கு புதிதாக ஜிஎஸ்டி வரி என கடுமையான வரி உயர்வுகளை பொதுமக்கள் தலையில் சுமத்தும் விடியா திமுக அரசைக் கண்டித்து மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அஇஅதிமுக கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்து திமுக மேயர், அனைத்து தீர்மானங்களையும் ஜனநாயக விரோதமாக நிறைவேற்றி கூட்டத்தை முடித்திருப்பது கண்டனத்திற்குரியது.

திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஜனநாயக முறையில் கழக கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தை காவல்துறையை ஏவி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயர்த்தப்பட்ட வரிகளைத் திரும்பப் பெறவும் நிர்வாகத் திறனற்ற 
மு.க.ஸ்டாலின்-ன் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.