சேலத்தில் நாளை ஈபிஎஸ் ஆலோசனை!!

 
EPS

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது அதிமுக. 9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும், 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது . தூத்துக்குடி, திருவள்ளூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

eps

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை  மேற்கொள்கிறார்.


தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை.