அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!
Feb 3, 2025, 11:06 IST

அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.