×

ஈபிஎஸ் டெபாசிட் இழப்பார்... சேலத்தில் ஒரு சீட் கூட வராது- புகழேந்தி

 

எடப்பாடி பழனிசாமி டெபாசிட் கூட வாங்க மாட்டார் என அதிமுக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் புகழேந்தி பேட்டியளித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் புகழேந்தி, “ஒற்றுமை இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் இழப்பார். ஒற்றுமை என்ற வார்த்தைக்கு கூட எடப்பாடி பழனிசாமி இடம் கொடுப்பதில்லை. செம்மலை, பொன்னையன் போன்ற மூத்த நிர்வாகிகள் கூட ஒன்றிணைய குரல் கொடுப்பதில்லை. செம்மலை, பொன்னையனே நியாயமா இது..! சசிகலா 4 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆட்சிக்கு வருவதற்குதான் எடப்பாடி பழனிசாமி எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று கூறினார். அவர் கட்சி ஒற்றுமைக்காக எந்த தியாகத்தையும் செய்வேன் என்று சொல்லவில்லை. மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக தான் இ.பி.எஸ். அப்படி சொல்லி இருக்கிறார். கட்சிக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் ஸ்டாலின் தான் முதல்வராக இருப்பார். திமுக தான் வெற்றி பெறும். அதிமுக கட்சிக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் சேலத்தில் ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாது. எடப்பாடி பழனிசாமி டெபாசிட் கூட வாங்க மாட்டார். சென்னையில் மழை பெய்தபோது தமிழ்நாடு அரசின் பணி சிறப்பாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்கி விட்டார்” என்றார்.