×

ஈரோடு : 1 ரூபாய்க்கு சட்டை..!  நம்பி வந்த இளைஞர்கள்.. கடை உரிமையாள செய்த சம்பவம்.. 

 

ஈரோட்டில் முதலில் வரும் 1,500 நபர்களுக்கு ₹1க்கு சட்டை என விளம்பரம் செய்யப்பட்டதைப் பார்த்து ஏராளமான இளைஞர்கள் கடைமுன் குவிந்தனர். அதேநேரம் கடையை மூடிவிட்டு, செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு கடை உரிமையாளர் தப்பியோடியதால் பரபரப்பு நிலவியது.  

ஈரோடு காந்தி சாலையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில்  1 ரூபாய்க்கு சட்டை விற்பனை செய்யப்படும் என்று இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனை நம்பி கடை திறப்பதற்கு முன்பாகவே ஏராளமான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கடைமுன் திரண்டனர்.  இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  ஆனால் நண்பகல் ஆகியும் கடை  திறக்கப்படவில்லை.  இதனை அடுத்து கடையின் உரிமையாளரை அங்கு திரண்டு இருந்த இளைஞர்கள் செல்போனில் தொடர்பு கொண்ட போது,  அவரது என் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ளது. இந்த நாள் ஆடை வாங்க காலை முதலே காத்திருந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் செய்வதறியாமல் ஏமாற்றமடைந்தனர்.  

மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பதாகவும் ஆனால் கடை திறக்கப்படவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் இதுபோல் விளம்பரம் செய்து  கடை உரிமையாளர்கள்  தங்களை ஏமாற்றுவதாக அங்கு திரண்டு இருந்த இளைஞர்கள் குற்றம் சாட்டினர்.   இதனிடையே குறிப்பிட்ட கடை முன்பு இளைஞர்கள் திரண்டு இருப்பதை அறிந்த போலீஸார் நிகவிடத்திற்கு விரைந்து வந்து, இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினர்.   மேலும்,  முன் அனுமதி இன்றி இதுபோன்ற சலுகை அறிவித்து வெளியிட்டு இருப்பதாகவும் போலீஸார் இளைஞர்களிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ச்சியாக ஏராளமான இளைஞர்களை கடைமுன் திரண்டதால் போலீசார் அவர்களை  விரட்டி அடித்து ,போக்குவரத்தை சரி செய்தனர். முன் அனுமதி பெறாமல் சலுகைகள் அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.