×

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு!

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் http://tngasa.in மற்றும் http://tngasa.org என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடத்தப்பட்டது. இருப்பினும், சில அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் காலியாக உள்ளன.

 எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று (12.09.2023) முதல் 14.09.2023 வரை என மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. கல்லூரிகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் TNGASA 2023-UG VACANCY என்ற தொகுப்பில் காணலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.