×

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக உயர்க்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடத்தப்பட்டது. இருப்பினும், சில அரசு கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் காலியாக உள்ளன.