×

சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்!!

 

சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 54 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.  கடந்த ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்க சாவடிகளுக்கு கட்டணம் ,  செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்க சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது.  அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 சுங்க சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என்றும் திண்டுக்கல், திருச்சி ,சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு  அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி, உளுந்தூர்பேட்டை உட்பட தமிழ்நாடு முழுவதும் 28க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கக் கட்டண உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக வாகனஓட்டிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.