×

சென்னையில் விதி மீறிய கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்றால் 99% கட்டிடங்களை இடிக்க வேண்டும்- ஆர்.கே.செல்வமணி

 

சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்க தான் செய்யும் உண்மையில் சொல்லப்போனால் சென்னையில் விதி மீறிய கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்றால் 99% கட்டிடங்களை இடிக்க வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிரமத்தில் புதிதாக கட்டப்பட்ட சவுத் இந்தியன் சினி டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் சங்க அலுவலகத்தை தலைவரும், நடிகருமான ராதாரவி மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி திறந்து வைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் செல்வமணி, “அரசு விதித்த அனைத்து விதிமுறைகளோடு டப்பிங் யூனியன் சங்க கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்க தான் செய்யும்.

உண்மையில் சொல்லப்போனால் விதிகளுக்கு உட்பட்ட கட்ட வேண்டும் என்றால் 99% சென்னையில் கட்டிடங்கள் இடிக்கப்பட தான் வேண்டும். இது ராதாரவியின் கட்டிடம் அல்ல, 1300 பேர்  உறுப்பினர்களின் கொண்டது. ராதாரவி ஒரு முள் போன்ற ரோஜா செடி போன்றும் பலாப்பழம் போலவும் இருப்பார். வெளியில் பார்க்கும்போது முள் போன்று இருக்கும், ஆனால் உள்ளுக்குள் இனிப்பாக இருப்பார். அதேபோன்று ராதாரவி என்கிற மனிதருக்குள் எப்போதும் நல்ல எண்ணங்கள் தான் இருக்கும்” என்றார்.