×

பெண் சாமியார் அன்னபூரணி அரசுக்கு 3-வது திருமணம்

 

பெண் சாமியார் அன்னபூரணி அரசுக்கு 3-வது திருமணம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த ராஜா தோப்பு கிராமத்தில் அன்னபூரணி அரசு என்ற பெண் சாமியாரின் ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் வாரந்தோறும் ஆன்மீக வழிபாடு மற்றும் அருளாசி வழங்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இந்த ஆசிரமத்தின் பக்கத்தில் அன்னபூரணி அரசுவின் இரண்டாவது கணவர் அரசு இறந்த நிலையில் அவரது உருவத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இவரது ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் அருள் ஆசிகளை தொடர்ந்து அவர்களது யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்வது இதன் மூலம் வெளி மாநில வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பக்தர்கள் ஏராளமான அவ்வப்போது கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு வந்து அவரது ஆசியைப் பெற்று செல்வது வழக்கம். இந்நிலையில் இவரது உதவியாளராக இருந்த ரோகித் என்பவரை அன்னபூரணி அரசு தான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள போவதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தார். அதற்குண்டான திருமண பத்திரிகைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அவரது பக்தர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு திருமண விழாவிற்கு வருக வருக என வரவேற்கப்பட்டிருந்தது.


 
இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அன்னபூரணி அரசு ஆசிரமத்தில் அன்னபூரணி அரசுக்கும் ரோகித்துக்கும் முறைப்படி மாலை மாற்றி புரோகிதர்கள் மந்திரங்கள் கூற, மெட்டி மாற்றி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை அவரது பக்தர்கள் தெய்வீக திருமணம் என கூறி கலந்து கொண்டு அவர்களிடத்தில் அருளாசி பெற்றுச் சென்றனர். அதே போன்று ஆன்மீக பக்தர் மற்றும் திருமணத்திற்கு வந்த கிராம மக்களுக்கு அருளாசி வழங்கிய அன்னபூரணி அரசு மற்றும் அவரது மூன்றாவது கணவர் ரோகித் ஆசி வழங்கி வழி அனுப்பி வைத்தனர். பின்னர் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.