நிதி நிறுவன மோசடி வழக்கு : தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கம்..
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகியுள்ள தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகளை முடக்கி, பொருலாதார குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்து வருகின்ரனர்.
தேவநாதனின் நிதி நிறுவனம் மீது ஏற்கனவே 144 புகார்கள் வந்த நிலையில், தற்போது 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தேவநாதனின் வங்கி கணக்குகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வங்கி கணக்குகள் என மொத்தம் 5 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
மேலும் தேவநாதன் ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் இது குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளனர். அதே சமயம் தலைமறைவாக உள்ள நிதி நிறுவனத்தின் இயக்குனர் சாலமன் மற்றும் பழைய இயக்குனர்களையும் காவலர்கள் தேடி வருகின்றனர்