×

என்கவுன்டர் செய்ய ரவுடியிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல்

 

சென்னை புழலில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்திடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீடு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா, குன்றத்தூர் திருவேங்கடம் சந்தோஷ், செல்வராஜ் திருமலை உள்பட 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் கொலையாளிகள் 11 பேரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். கொலையாளிகளில் ஒருவரான குன்றத்தூர் திருவேங்கடத்தை வழக்கு விசாரணை தொடர்பாக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் புழல் நோக்கி அழைத்துச் சென்றனர். மாதவரம் ஆடு தொட்டி அருகே சென்றபோது போலீசாரின் பிடியிலிருந்து திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார். அவரை இன்று அதிகாலை போலீசார் என்கவுன்டர் செய்தனர்.

இந்நிலையில் சென்னை புழலில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்திடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புழல் பகுதியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாக அளித்த தகவலில் போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர். ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது போலீசாரை நோக்கி திருவேங்கடம் சுட்டுள்ளார். தற்காப்புக்காக ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.