×

டிச.2 மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை- மீன்வளத்துறை

 

டிசம்பர் இரண்டாம் தேதி  மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாடு-புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை காலை காற்றழுத்த தாழ்வு நிலையாக கரையை கடக்க உள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 55 65 கி.மீ வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  தெற்கு ஆந்திர பிரதேசம் மாநில கடல் பகுதிகளில் மணிக்கு 50 - 60 கி.மீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

டிசம்பர் ஒன்றாம் தேதி வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆந்திர பிரதேசம் மாநில கடல் பகுதிகளில் மணிக்கு 50 60 கி.மீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டிசம்பர் இரண்டாம் தேதி தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல கூடாதெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, வரும் 02.12.2024 வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமெனவும், மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்கச் செல்லக்கூடாதெனவும் மீன்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.