×

சென்னை மெரினாவில் விமான சாகசம்

 

சென்னை மெரினா கடற்கரையில் முதல்முறையாக 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அக்.5, 6 தேதிகளில் சென்னை மெரினா கடற்கரையில் முதல்முறையாக 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் ரஃபேல், சூகோய், தேஜாஸ் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் பங்கேற்கின்றன. ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். இதனை பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.